மயான ஓசை……
உறவுகளின் அழுகை…
உரிமைகளின் போராட்டம்…
கூடி நிற்கும் பெரும் கூட்டம்…
காண வந்ததோ உன்னை மட்டும்…
கண் திறவா கலைமகனே
துயில் கொள்வது சரிதானோ???
உலகில் நீ கொடுத்த உறவுகள்
தன் கண்ணீரால் உன் கால் கழுவ
மீளா பயணம் நோக்கி
சென்றாயோ தலை மகனே…
பெற்ற மகள் அழைக்கும் சத்தம் கேளாயோ…
அவள் கண்ணீர் உன்னை சேரும் போதும் நிற்க மாட்டாயோ…
ஏதும் அறியா சிறு பிள்ளை செய்வதறிய சிறு கிள்ளை
உன் வரவை எதிர்நோக்கும் அவளிடம்
வரமாட்டாய் என்பதை கூற மறந்தாயோ…
உறவை கரம் பிடித்த ஒர் உள்ளம்
உயிர் உருகி அழுகிறதே செவிகொடுக்க மாட்டாயோ…
தலைவனே நீ இன்றி இந்த தாய் உள்ளம்
எப்படி வழி நடத்தும் வாழ்வை... இனி வலியில் தான் நடத்தும் வாழ்கை…
மயான ஓசை செவிகளில் கேட்கும் யுகம் யுகமாய்…
என்றாவது உன் துயில் தட்டி எழுப்பும் சுகம் சுகமாய் அன்று
மௌனமான இந்த மயான ஓசை
மறக்கட்டும் அதன் பேச்சை…
அன்றாவது புரிந்து கொள்
நீ அரிது
எங்களை பிரிந்தது பெரிது
சிந்தித்து பார் சிறிது
உன் தாக்கம் எங்கள் வாழ்வில்
இனி எது…
உரிமையில் தந்தையாகி…
உறவில் தயுமாணவனே…
பிழை என்ன செய்தேனோ யான் அறியேன்
ஓர் வார்த்தை கூற மறந்தாயே
என்றும் மறவேன்…
உனக்காய் சூடிய மலர் மனம் பிரிந்தது
நீ இட்ட செம் பொட்டு
எக்கரையோடு
தாயவளின் நிலை
கண்டேனே சோகத்தோடு
எங்கள் வாழ்வை மீட்டெடுக்க
வரமாட்டாயோ என்ற ஏக்கத்தோடு
பாசத்தால் பசியாற்றியவனே
பரிதவிகிறோம் பாராயோ
காலம் தந்த கணவனே
என் இதய சிப்பியில்
உன் நினைவுகளை முத்தாய்
சுமந்தே நிற்கட்டும்…
நிஷாத்……
No comments:
Post a Comment